/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...
/
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள்...
ADDED : அக் 28, 2024 04:44 AM

செடிகள் படர்ந்த டிரான்ஸ்பார்ம் : வடமதுரை குரும்பபட்டியில் டிரான்ஸ்பார்மரில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--கண்ணன், குரும்பபட்டி.
-
கொசு உற்பத்தியாகும் கழிவுநீர் : திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிசாமி, திண்டுக்கல்.
ரோட்டோரங்களில் தேங்கும் மணல் : திண்டுக்கல்- திருச்சி ரோட்டோரங்களில் அதிகளவில் மணல்மேவி உள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மணலை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுவாதி,திண்டுக்கல்.
---------ஜல்லிக்கற்கள் பெயர்ந்த ரோடுகள் : கோபால்பட்டி கோம்பைபட்டி ஊராட்சி பாப்பம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குண்டும்,குழியுமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், பாப்பம்பட்டி.
---------பாதியில் நிற்கும் பணிகள் : தாண்டிக்குடி மங்களம்கொம்பில் அரசு கட்டித் தரும் பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீடு பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். வீட்டை முழுமையாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தாண்டிக்குடி.
குப்பையால் சீர்கேடு : வத்தலக்குண்டு பேரூராட்சி காந்திநகர் கிழக்கு பகுதி ரோட்டில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இங்கு மழைநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தினமும் இங்குள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சுருளியப்பன், வத்தலக்குண்டு.
----------
மழைநீரால் அவதி : பழைய கன்னிவாடி ஆரம்பப்பள்ளி செல்லும் வழியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள்,பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், பழைய கன்னிவாடி.