/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டில் பிரசவமாகி மயங்கி கிடந்த தாய், சேய் சிசு பலி; தாய்க்கு சிகிச்சை

ADDED : ஆக 30, 2025 06:19 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் அருகே மாலைப்பட்டி டான்பாஸ்கோ நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் 33, கட்டட வேலை செய்கிறார்.
மனைவி மகேஸ்வரி 30. இரண்டரை வயதில் கமலேஷ், ஒன்றரை வயதில் சாக்கோஸ் என 2 மகன்களும் உள்ளனர். மகேஸ்வரி 3வது முறையாக கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
வீட்டில் இருந்த மகேஸ்வரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை ஒருபுறமும், மற்றொருபுறம் மகேஸ்வரியும் மயங்கி கிடந்துள்ளார்.
வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி வந்த சதீஷ்குமார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாய் சேய் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். மகேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.