/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூதாட்டி மீது மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு;தாய், மகன் கைது
/
மூதாட்டி மீது மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு;தாய், மகன் கைது
மூதாட்டி மீது மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு;தாய், மகன் கைது
மூதாட்டி மீது மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு;தாய், மகன் கைது
ADDED : செப் 12, 2025 04:31 AM
எரியோடு:எரியோடு அருகே மூதாட்டியின் மீது அதிகாலையில் மிளகாய் பொடி துாவி நகை பறித்த பெண், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.
பாகாநத்தத்தில் கூரைக் கொட்டகையில் டீக்கடை நடத்தியபடி தனியே வசிப்பவர் அய்யம்மாள் 87. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கடையை திறந்த போது 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா, எரியோடு எஸ்.ஐ., மில்டன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
கரூரில் தலைமறைவாக இருந்த பாகாநத்தத்தை சேர்ந்த 35 வயது பெண், அவரது மகனான 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். நகையையும் பறிமுதல் செய்தனர்.