/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் குழந்தையை சர்ச் வாசலில் விட்டு சென்ற தாய்க்கு வலை
/
பெண் குழந்தையை சர்ச் வாசலில் விட்டு சென்ற தாய்க்கு வலை
பெண் குழந்தையை சர்ச் வாசலில் விட்டு சென்ற தாய்க்கு வலை
பெண் குழந்தையை சர்ச் வாசலில் விட்டு சென்ற தாய்க்கு வலை
ADDED : நவ 22, 2024 04:56 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காலனி அருகே அந்தோணியார் சர்ச் முன்பு பெண் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடுகின்றனர்.
திண்டுக்கல் ரயில்வே காலனி அருகே அந்தோணியார் சர்ச் உள்ளது. இதன் முன் பகுதியிலிருந்து நேற்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக சிறு குழந்தை அழுவது போன்ற அழுகுரல் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சர்ச்சுக்கு வந்து பார்த்தனர். அங்கு பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை யாரோ ஒரு கல் நெஞ்சம் படைத்த தாய் வீசி சென்றுள்ளார். உடனே இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை வீசி சென்ற பெண் யார். எதற்காக விட்டு சென்றார். என்பது குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர்.