UPDATED : அக் 15, 2026 05:50 PM
ADDED : அக் 15, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் மகளிர் சுய உதவிக்குழுவின் மதி அங்காடி சிற்றுண்டி உணவகம் திறப்பு விழா நடந்தது. உணவகத்தை திறந்து வைத்து கலெக்டர் துர்கா பேசுகையில், ‘மாவட்டத்தில் மூன்று மதி அங்காடி சிற்றுண்டி உணவகங்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு இயங்குகின்றன. இங்கு சிறுதானியங்களில் தயாரித்த லட்டு, முருக்கு, முளைக்கட்டிய தானியங்கள், காய்கறி சூப் வகைகள், சத்துள்ள கலவை சாத வகைகள் தினசரி விற்பனை செய்யப்படும். சிறுதானிய உணவுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடும்’ என்றார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கங்காதாரணி, துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
