/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த ரோடுகளால் திணறும் வாகனஓட்டிகள் ஒட்டன்சத்திரம் 11 வது வார்டில் தீராதபிரச்னைகள்
/
சேதமடைந்த ரோடுகளால் திணறும் வாகனஓட்டிகள் ஒட்டன்சத்திரம் 11 வது வார்டில் தீராதபிரச்னைகள்
சேதமடைந்த ரோடுகளால் திணறும் வாகனஓட்டிகள் ஒட்டன்சத்திரம் 11 வது வார்டில் தீராதபிரச்னைகள்
சேதமடைந்த ரோடுகளால் திணறும் வாகனஓட்டிகள் ஒட்டன்சத்திரம் 11 வது வார்டில் தீராதபிரச்னைகள்
ADDED : செப் 27, 2025 04:32 AM

ஒட்டன்சத்திரம்: குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட தெரு ரோடுகள் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பல தெருக்களில் சாக்கடை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
வேடசந்துார் ரோடு, கருவூலக காலனி, துல்கருணை சிக்கந்தர் நகர், நல்லுப் பிள்ளை பேட்டை, திண்டுக்கல் - பழநி ரோடு , நாகணம்பட்டி ரோடு , தீரன் சின்னமலை நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் வேடசந்துார் ரோட்டில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
தெருக்களில் போடப்பட்ட தார் ரோடுகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக சேதப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகள், டூவீலர்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் செக் போஸ்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருவதால் தெரு விளக்கு,சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ரோடுகளை சீரமையுங்க பாலமுருகன், ஆட்டோ டிரைவர்: குடிநீர் பிரச்னை இல்லை. செக்போஸ்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் இல்லாமல். ஒட்டன்சத்திரத்தில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.
குழாய் அமைக்கும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட தெரு ரோடுகள் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். புதிய குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.
சாக்கடை இல்லை திருப்பதி, சமூக ஆர்வலர், ஒட்டன்சத்திரம்: பல இடங்களில் சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வார்டில் உள்ள சாக்கடைகள் மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடைகளின் மேல்பகுதியில் சிமென்ட் ஸ்லாப்கள் அமைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் சாக்கடை, அதிகமான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றம் வெள்ளைச்சாமி, நகராட்சி துணைத் தலைவர் (தி.மு.க.,): வேடசந்தூர்ரோடு அண்ணா நகர் பகுதியில் சாக்கடை இல்லாமல் நீண்ட காலமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது அங்கு சாக்கடை அமைக்கப்பட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வார்டுகளில் அனைத்து இடங்களிலும் குறுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வடிகால் வசதி செய்து தரப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
செக்போஸ்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.