/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லெக்கையன்கோட்டையில் ரோடுகள் இணையும் பகுதி சேதம் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஏப் 21, 2025 06:37 AM

ஒட்டன்சத்திரம்: லெக்கையன்கோட்டையில் பைபாஸ் ரோடும் ஒட்டன்சத்திரம் ரோடும் சந்திக்கும் பகுதி மிகுந்த சேதம் அடைந்துள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
ஒட்டன்சத்திரம்- - திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோட்டில் சென்று திண்டுக்கல் செல்கின்றன.
ஒட்டன்சத்திரம் ரோடும் பைபாஸ் ரோடும் இணையும் பகுதி மண்ரோடாக உள்ளது.
இதனால் அடிக்கடி சேதமடைகிறது. இப்பகுதியில் பள்ளங்கள் அதிகரித்து வருவதால் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டில் திரும்புவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் இங்கு இருந்த பள்ளங்களை மறைத்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் குறித்து சரிவர தெரிவதில்லை.
தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்கள் இந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றன.
பல சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது. ரோடுகளின் இணைப்பு பகுதியில் உள்ள பள்ளங்களை சீரமைத்து தார் ரோடு அமைத்து வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் வழிவகை ஏற்படுத்த வேண்டும்.