/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சுறுத்தும் டிரான்பார்மரால் வாகன ஓட்டிகள் பீதி
/
அச்சுறுத்தும் டிரான்பார்மரால் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : மே 03, 2024 06:42 AM

குப்பையால் சுகாதாரக்கேடு
ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் நுங்கு மட்டைகள் , குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - பொன்ரவி, ஒட்டன்சத்திரம்.
.........-------அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மெய்யம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் அச்சுறுத்தும் வகையில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் டிரான்ஸ்பார்மரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். வீரா, நத்தம்.
..............-------சேதமடைந்த ரோடு
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ரோடு சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த ரோட்டால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுகின்றனர் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமார், திண்டுக்கல்.
.......--------
துார் வாராத சாக்கடை
திண்டுக்கல் ஜி.டி.என் சாலை ரோட்டில் சாக்கடை துார் வராமல் மண் மேவி உள்ளது .மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது . சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் முழுமையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் . கோபி, திண்டுக்கல்.
............---------
சேதமடைந்த பாலம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் தரைபாலம் சேதம் அடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .மக்கள், வாகனங்கள் அதிகமாக செல்வதால் பாலத்தை சரி செய்ய வேண்டும். முருகன், திண்டுக்கல்.
..........
---------குப்பையை அகற்றுங்க
திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ரோட்டில் குப்பை அள்ளாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் சேகரமாகும் குப்பை நிரம்பி வழிவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும். மயில்சாமி, கொட்டப்பட்டி.
...---------ரோட்டில் கழிவுநீர் தேக்கம்
தேவரப்பம்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் ரோட்டில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சாக்கடைியில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர் செல்கிறது . இதை தடுக்க வேண்டும்.மாரிமுத்து,அய்யம்பாளையம்.
...........------