/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான அடிகுழாயால் தடுமாறும் வாகன ஓட்டிகள்....
/
சேதமான அடிகுழாயால் தடுமாறும் வாகன ஓட்டிகள்....
ADDED : பிப் 19, 2024 05:02 AM

விபத்தை ஏற்படுத்தும் ஜல்லிகற்கள்
வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டி பிரிவு பகுதியில் ரோட்டின் இரு புறங்களிலும் மண்,ஜல்லி கற்கள் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திப்பதுடன், விபத்து அபாயமும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலமுருகன், செடிப்பட்டி.---------
சேதமான அடிகுழாயால் இடையூறு
பழநி பெரியநாயகியம்மன் கோயில் அருகே அடிகுழாய் சேதமடைந்து நடுரோட்டில் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அவ்வழியில் செல்வோருக்கு போக்குவரத்து இடையூறாகவும் உள்ளது. சேதமான அடிகுழாயை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், பழநி.-
தெருவிளக்குகள் இல்லாமல் அவதி
--------திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி சர்வேயர் நகர் 2வது தெருவில் தெருவிளக்கு இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் அதிக அளவில் வருவதால் தெரு விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன். பாலகிருஷ்ணாபுரம்.----------
நடுரோட்டில் மின்கம்பம்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரே திண்டுக்கல் ரோடை விரிவாக்கம் செய்த போது மின் கம்பத்தை அகற்றாமல் விட்டுள்ளனர். இதால் இங்கிருக்கும் மின்கம்பம் ரோட்டின் நடுப்பகுதியில் உள்ளது. இதை அப்புறப்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜெயசீலன்,ஒட்டன்சத்திரம்.----------
குப்பையால் உருவாகும் சீர்கேடு
மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் குப்பை தேங்கி கிடக்கிறது. மழை நேரங்களில் இங்கு நீர் தேங்குவதால் டெங்கு போன்ற நோய்களும் பரவுகின்றன. குப்பை தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபால், அய்யலுார்.----------
ரோடு பள்ளத்தால் ஆபத்து
திண்டுக்கல் மேட்டுப்பட்டிக்கு செல்லும் கருவூலம் ரோட்டில் சாக்கடை பாலம் அருகே ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே தடுமாறி விழுகின்றனர். பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னத்தம்பி, திண்டுக்கல்.---------
தொற்று பரப்பும் கழிவுநீர்
திண்டுக்கல் சவுராஷ்டிரா காலனியில் சாக்கடை கால்வாயை துார் வராததால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. சாக்கடையை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ்குமார், திண்டுக்கல்.------
......................................................................

