ADDED : ஜூலை 27, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: கோவிலுார் அருகே ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி கருங்குளத்தில் அரசு அனுமதித்த அளவை காட்டிலும் அதிக ஆழத்தில் மண் வெட்டி எடுக்கும் பணியில் சிலர் ஈடு பட்டுள்ளனர்.
அதிருப்தியான அப்பகுதி மக்கள் மண் அள்ளிய டிப்பர் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மண்பாண்ட தொழிலுக்கு எனக்கூறி முறைகேடாக மண் வெட்டி விற்கப்படுவதாக போலீசாரிடம் கூறினர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூற கலைந்து சென்றனர்.