/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடை பிளாஸ்டிக் தகவல் தெரிவித்தால் சன்மானம்; நகராட்சி அறிவிப்பு
/
தடை பிளாஸ்டிக் தகவல் தெரிவித்தால் சன்மானம்; நகராட்சி அறிவிப்பு
தடை பிளாஸ்டிக் தகவல் தெரிவித்தால் சன்மானம்; நகராட்சி அறிவிப்பு
தடை பிளாஸ்டிக் தகவல் தெரிவித்தால் சன்மானம்; நகராட்சி அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 05:32 AM
பழநி: பழநி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தகவல் தெரிவித்தால் நகராட்சி சார்பில் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
பழநி பகுதியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அடிவாரம் பகுதி புதிய கடைகளில் தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதை தொடர்ந்து பழநி நகராட்சி சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில்,கறிக்கடைகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து தாமரை, வாழை, கொட்டமுத்து துணிப்பை பயன்படுத்த வேண்டும்.
காய்கறி கடை, பழக்கடைகளில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் ,கயிறுகளுக்கு பதிலாக மக்கும் பழுப்பு நிற கேரி கவர், துணிப்பை, மக்கும் பேப்பர் பை, சணல் கயிறு பயன்படுத்த வேண்டும்.
வணிக நிறுவனங்களான ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர், டீக்கடை ஸ்வீட் கடை, மருந்தகங்களில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது தடை பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிய வந்தால் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு லைசென்ஸ்ரத்து, கடைகளுக்கு சீல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தெரியப்படுத்தினால் சன்மானம் வழங்கப்படும்.
இது குறித்து தகவல் அளிக்க 82488 11971 க்கு தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

