/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூலித்தொழிலாளி கொலை:ஒருவருக்கு ஆயுள்
/
கூலித்தொழிலாளி கொலை:ஒருவருக்கு ஆயுள்
ADDED : ஆக 27, 2024 08:02 PM

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு33. இவர் 2019ல் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் 38, என்பவரது மனைவியுடன் தகாத உறவில் இருந்தார். இந்த விவகாரம் சண்முகத்திற்கு தெரியவர அவர் பிரபுவை,கண்டித்துள்ளார். அதையும் பொருட்படுத்தாத பிரபு, மீண்டும் சண்முகத்தின் மனைவியுடன் பழகினார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், வீட்டில் துாங்கி கொண்டிருந்த பிரபுவை, கழுத்தை அறுத்து கொலை செய்தார். நத்தம் போலீசார் வழக்கு பதிந்து சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்க விசாரித்த நீதிபதி முத்துசாரதா,குற்றவாளி சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை,ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.