ADDED : ஜன 20, 2024 05:22 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் மகளுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கள்ளக்காதலனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சி கோம்பையூரை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி நாகராணி 55. ஜி.நடுப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார் . இவரது மகள் மாசிலாமணியும் கணவரை பிரிந்து தாயுடன் விட்டல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தார்.
அப்போது விட்ட நாயக்கன்பட்டியை சேர்ந்த பைனான்சியர் முருகேசன் 34, உடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நெருக்கம்அக்கம் பக்கத்தாருக்கு தெரிய வர மாரம்பாடி ரோட்டில் உள்ள காமராஜர் நகரில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்தார். முருகேசன் மாசிலாமணி உடன் மீண்டும் காதலை தொடர்ந்ததால் இதை நாகராணி கண்டித்துள்ளார்.
ஆத்திரமடைந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராணியை அடித்து கொலை செய்து விட்டு தப்பினார். மாசிலாமணி அலைபேசியை வாங்கி போலீசார் நடத்திய சோதனையில் அவரது கள்ளக்காதலன் முருகேசன் கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து முருகேசனை வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.