ADDED : மார் 19, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : கொடைக்கானல் சிவகிரி பட்டி பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் ஆலமரத்துகளத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி ஆனந்தனை 41, பிப்.,22 ல் மருத்துவ நகரை சேர்ந்த முருகன் 29,அரிவாளால் வெட்டி கொன்றார்.
முருகனை பழநி அடிவாரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் ,திண்டுக்கல் எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் சரவணன் உத்தரவுபடி குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.