தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


UPDATED : நவ 15, 2026 11:39 PM

ADDED : நவ 15, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 11:39 PM ADDED : நவ 15, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:

திண்டுக்கல் சுற்றுப்பகுதி முருகன் கோயில்களில் பக்தர்கள் படை சூழ, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் இன்று (நவ.,15) திரளான பக்தர்கள் அரோகரோ கோஷம் விண்ணதிர நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவ.,10ல் துவங்கியது. விழாவின் 6 நாட்களிலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. சஷ்டி விழாவின், சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாவட்டத்தில் அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று விமர்சையாக நடந்தது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எம்.ஆர்., பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி, மயில் முருகன் சுவாமி கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் நடந்தது. அதன்படி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி, தாராகாசூரன், அஜமுகி, சிங்காசூரன், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிப்பட்டனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

நத்தம்:



திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் விழா நடந்தது. இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் இன்று மாலை நடந்தது. இதில் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகாசூரன், கஜமுகாசூரன், தாரகாசூரனை தனது வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இறுதியில் வெற்றிவேலை கொண்டு மாமரமாக நின்ற சூரபத்மனை வேல் கொண்டு வதம் செய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

சின்னாளபட்டி:



சதுர்முக முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கி, கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வடமதுரை:



வடமதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன், தென்னம்பட்டி சுப்பிரமணிய சுவாமி, நந்தீஸ்வரர் கோயில் வளாக பாலமுருகன், தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கடந்த நவ.,10ல் முதல் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். நாள்தோறும் சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று சூர்சம்ஹாரத்தை முன்னிட்டு சில கோயில்களில் சூரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us