ADDED : ஏப் 18, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி நகர ,வட்டார ஜமாத்தார்கள்,ஜமா அப்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்.எப் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரிய பள்ளிவாசலில் இருந்து பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட், ரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் ரோடு வழியாக ஆர்ப்பாட்டம் திடலுக்கு ஊர்வலமாக சென்றனர். தி.மு.க., காங்.,கம்யூ., வி.சி.க., கட்சியினர், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கீரனுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

