/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 05, 2025 05:12 AM

நத்தம்: -நத்தம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி சக்திவிநாயகர், முத்தாலம்மன் கோயில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 2-ம் கால யாக பூஜை நடந்த நிலையில் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்ல சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் கலந்து கொண்டனர்.
பழநி: சண்முக நதி கரையில் உள்ள துார்நாச்சியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா பிள்ளையார் வழிபாடு, யாக யாக பூஜைகளுடன் துவங்கியது.
காப்பு கட்டுதல், முதல் கால வேள்வி நேற்று காலை இரண்டாம் கால வேள்வி, தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை இரண்டாம் கால வேள்வியுடன் தூர்நாச்சிஅம்மன், கன்னிமார் சன்னதிகளுக்கு பழநி கோயில் கும்பேஸ்வர குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.