/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
n பள்ளங்களாக மாறிய ரோடுகளால் முதுகு தண்டு நோகுது சீரமைப்பில் இல்லையே அக்கறை
/
n பள்ளங்களாக மாறிய ரோடுகளால் முதுகு தண்டு நோகுது சீரமைப்பில் இல்லையே அக்கறை
n பள்ளங்களாக மாறிய ரோடுகளால் முதுகு தண்டு நோகுது சீரமைப்பில் இல்லையே அக்கறை
n பள்ளங்களாக மாறிய ரோடுகளால் முதுகு தண்டு நோகுது சீரமைப்பில் இல்லையே அக்கறை
ADDED : டிச 06, 2025 05:01 AM

மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் ஒன்று திண்டுக்கல் பழநி தேசிய நெடுஞ்சாலை . இந்த ரோட்டில் லெக்கையன்கோட்டையில் இருந்து செம்மடைப்பட்டி வரை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் ரோட்டில் உள்ள பள்ளங்கள் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக டூவீலர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடுகளை இணைக்க பல இணைப்பு ரோடுகள் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக இந்த ரோடுகள் பாதிப்பை சந்தித்துள்ளன. ரோடு இருக்கும் இடமே தெரியவில்லை. மேலும் பல ரோடுகளில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வெளியே சிதறி கிடக்கிறது. இலக்கையன் கோட்டை பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்லும் சர்வீஸ் ரோடு, தாராபுரம் ரோட்டில் இருந்து கெக்கங்கோட்டை பைபாஸ் செல்லும் சர்வீஸ் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல ரோடுகளின் நிலை மோசமாக உள்ளதால் நான்கு சக்கர வாகனங்களை இயக்க கூட மிகவும் சிரமம் ஏற்படுகிறது. லெக்கையன்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் காரணமாக குறுகிய ரோட்டில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோடும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. மாவட்டத்தில் உள்ள பல இணைப்பு ரோடுகளும் சேதமடைந்து காணப்படுகிறது. வாகன விபத்துகளுக்கு ரோட்டின் நிலை மோசமாக இருப்பதும் ஒரு காரணியாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த ரோடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

