/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்னை விவசாயிகள் நிதியில் முறைகேடு மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
/
தென்னை விவசாயிகள் நிதியில் முறைகேடு மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
தென்னை விவசாயிகள் நிதியில் முறைகேடு மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
தென்னை விவசாயிகள் நிதியில் முறைகேடு மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : டிச 06, 2025 02:15 AM
ஒட்டன்சத்திரம்: ''தென்னை விவசாயி களுக்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடு நடப் பதாக'' தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் விஜய முருகன் குற்றம்சாட்டினார்.
ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:
தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக ஏராளமான நிதி ஒதுக்குவதாக கூறப் படுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதி தமிழக தென்னை விவசாயிகளுக்கு குறைவாகவே கொடுக்கப்படுகிறது. இதில் முறைகேடு நடக்கிறது.
தமிழ்நாடு தோட்டக்கலை மூலமாக தென்னை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய மானிய நிதி யிலும் முறைகேடு நடப்பதாக செய்திகள் வரு கின்றன.
இவற்றை களைவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகளிடம் வியாபாரிகள் லாபக் காய் என்ற பெயரில் 1000 காய்க்கு 150 தேங்காய் இலவசமாக எடுக்கின்றனர்.
லாபக் காயை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு மார்க்கெட்டிங் கமிட்டி மூலமாக கிலோ கணக்கில் தேங்காயை வாங்க வேண்டும்.
நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். டிச.18ல் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடக்கும் இரண்டாவது மாநில மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.

