/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
/
ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
ADDED : டிச 06, 2025 02:12 AM

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்ட ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மணலுார் வி.ஏ.ஓ., முருகனை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா 45. கன்னிவாடி மலைப்பகுதியில் உள்ள தனது 6 ஏக்கர் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்ற விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக மணலுார் வி.ஏ.ஓ., முருகன் 55, லஞ்சம் கேட்டார். திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் இளையராஜா புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி ஆத்துார் தாலுகா அலுவலக வளாக வி.ஏ.ஓ., சங்க கட்டடத்தில் இருந்த முருகனிடம் ரூ. 10 ஆயிரத்தை கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் முருகனை கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா ப.விராலிபட்டியில் வேலை பார்த்தபோது வறட்சி நிவாரண வழங்கலில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதே தாலுகாவை சேர்ந்த அய்யம்பாளையம் வி.ஏ.ஓ.வாக இருந்த ரமேஷ் சில மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கலுக்கான 'வசூலி'ன்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இலவச பட்டா வழங்கலுக்காக சிறப்பு முகாம்களை நடத்திய அரசு மனுக்கள் பெற்று வரும் சூழலில் வசூல் வேட்டையில் சிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கை மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

