/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூம்பு, பாக்ஸ் ஒலிபெருக்கிகள் பயன்பாடு: அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

ADDED : பிப் 09, 2024 05:15 AM

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களில் குறிப்பிட்ட அளவு டெசிபல் ஒலி எழுப்பும் பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
23 ஆண்டுகளுக்கு முன் அதிக ஒலி மாசு ஏற்படுத்துவதாக இவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயில் விழாக்கள் பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசு விழாக்களிலும் இவற்றின் கட்டுப்பாடற்ற பயன்பாடு தாராளமாக பெருகி வருகிறது. அளவிற்கு மீறிய கூம்பு வடிவ, பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை அதிகரிக்கிறது. இவை தவிர, பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாத அவலநிலை உள்ளது. இவற்றின் பயன்பாடு மூலம் காது கேளாமை, தடுமாற்றத்தால் விபத்துக்கள், இதய நோய் பாதிப்புடையோரை அவதிக்குள்ளாக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.