/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகசிவா சிட்பண்ட் 4 வது கிளை திறப்பு
/
நாகசிவா சிட்பண்ட் 4 வது கிளை திறப்பு
ADDED : ஏப் 02, 2025 03:32 AM

கோபால்பட்டி : கோபால்பட்டியில் நாகசிவா சிட் பண்ட் நிர்வாக இயக்குனர் நாகராஜ் பெரியசாமி பிள்ளை பிறந்த நாள் விழா , 4வது கிளை திறப்பு விழா நடந்தது.
புதிய கிளையை சாணார்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன் திறந்து வைத்தார். வாடிக்கையாளர்களுக்கு பிறந்தநாள் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நாகசிவா சிட் பண்ட் நிர்வாக இயக்குனர் நாகராஜ் பிள்ளை வரவேற்றார். இணை நிர்வாக இயக்குனர்கள் சிவபிரசாந்த் நாகராஜ், தேவி சிவப்பிரசாந்த், செந்துறை முன்னாள் ஊராட்சி தலைவர் சபரி முத்து குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். கம்யூனிஸ்ட் நிர்வாகி ஸ்டாலின், குடகிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி, வ.உ.சி. இளைஞர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.எஸ். சரவண செல்வம், நாகசிவா சிட் பண்ட் ஒர்க்கிங் பார்ட்னர்ஸ் குப்புசாமி, தர்மராஜன் ,நடராஜன் மாணிக்கம் பிள்ளை, அகல்யா ஸ்டாலின், குமர வடிவில், பாலசுப்பிரமணியன், முருகன், முருகேசன், சுப்பிரமணிகண்டன், ஜானி சபரி கலந்து கொண்டனர்.

