/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழில் பெயர் பலகைகள்; கலெக்டர்
/
தமிழில் பெயர் பலகைகள்; கலெக்டர்
ADDED : ஏப் 05, 2025 05:14 AM
திண்டுக்கல்: ''கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் ''என கலெக்டர் சரவணன் கூறினார்.
அவர் கூறியதாவது: அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அனைத்துத் தொழிற்சாலைகளிலும் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். அதன் கீழ் ஆங்கிலத்திலும், அதன் பின் அவரவர் விரும்பும் மொழியிலும் அமைக்கலாம்.இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழில் பெயர்ப்பலகை உள்ளதா என ஆய்வு செய்வர்.
மே 15க்குள் 100 சதவீதம் தமிழ் பெயர்ப்பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.