/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
நத்தம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 01, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அசோக்நகர் தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதையொட்டி நேற்று முன்தினம் கோயில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாகுதி , முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
2-ம் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதன் பின் மேளதாளம் முழங்க அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித தீர்த்தம் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.