/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி விழா- மார்ச்3ல் துவக்கம்
/
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி விழா- மார்ச்3ல் துவக்கம்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி விழா- மார்ச்3ல் துவக்கம்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி விழா- மார்ச்3ல் துவக்கம்
ADDED : பிப் 21, 2025 06:37 AM

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மார்ச் 3-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை தொடர்ந்து 4 ல் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோயிலை வந்து சேருவர்.
பின்னர் அங்கிருந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவர். அங்கு பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குகிறார்கள் அன்று இரவு அம்மன் குளத்திலிருந்து நகர் வலமாக கம்பம் எடுத்து வர கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். மார்ச் 7- ல் மயில் வாகனம்,11ல் சிம்ம வாகனம், 14-ல் அன்ன வாகனத்திலும் அம்மன் நகர்வலம் வருகிறார். 16- ல் பால்குடம், 17ல் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 18 அதிகாலை முதல் மதியம் வரை அக்னிசட்டி, மாலையில் கழுகுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. 19 காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு,இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் நிறைவு பெறுகிறது.