/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள்
/
பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள்
பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள்
பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள்
ADDED : ஆக 25, 2025 03:31 AM

நத்தம் : ''செப்.6 ல் நத்தம் வரும் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும்'' என கோபால்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மணிகண்டன், சின்னு, பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இளம் வழுதி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் கோபால்பட்டி விஜயன், சேகர், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ் பாபு கலந்து கொண்டனர்.