ADDED : அக் 13, 2025 03:35 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) துவக்க விழா நடந்தது.
பள்ளியின் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். 14வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படையை துவக்கி வைத்தார். 8ம் வகுப்பு மாணவி கேடட் ஷனாதனா வரவேற்றார். பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திரசேகரன் தேசிய மாணவர் படையின் வரலாறு, சிறப்பு குறித்து விளக்கினார். மாணவன் கேடட் ஆதித்தியா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, அருண் ஷோரி, விஜய சாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், முதன்மை மேலாளர் பிரபாகரன், மேலாளர்கள் ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் செய்திருந்தனர். இதில் 14வது பட்டாலியன் சுபேதார் மேஜர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.