sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாசில்லா சமுதாயத்தின் அடிப்படையாகும் மரம் வளர்ப்பு

/

மாசில்லா சமுதாயத்தின் அடிப்படையாகும் மரம் வளர்ப்பு

மாசில்லா சமுதாயத்தின் அடிப்படையாகும் மரம் வளர்ப்பு

மாசில்லா சமுதாயத்தின் அடிப்படையாகும் மரம் வளர்ப்பு


ADDED : அக் 13, 2025 03:36 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் செம்பட்டியைச் சேர்ந்த தனியார் தன்னார்வலர் அமைப்பு ஒன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மரக்கன்று வளர்ப்பை ஊக்குவித்து மரம் நடவு, பரமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

நாகரீக வளர்ச்சியால் வணங்கல் நீர்நிலைகள், விளை நிலம் அழிப்பு, தொழிற்சாலை, வாகன கழிவு புகையால் ஓசோன் பாதிப்பு என இயற்கைக்கு எதிராக சூழலை மாசுபடுத்தும் காரணிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாசில்லாத சூழலை உருவாக்குவதில், இயற்கை ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் அரசு துறைகள் என பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்துதல், வீட்டுத் தோட்டங்கள் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாத்தல், நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைத்தல், சத்தான பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதுடன், இயற்கையான முறையில் இவற்றை விளைவித்து மண்ணை வளமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் செம்பட்டியைச் சேர்ந்த ஏகம் பவுண்டேஷன் அமைப்பினர்.

இயற்கையின் மகத்துவத்தை உணர வேண்டும் மகாதேவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஏகம் பவுண்டேஷன்: இயற்கையின் மகத்துவத்தை இன்னும் நாம் உணர வேண்டியுள்ளது. மாசில்லா சமுதாயம் என்பது மரக்கன்று நடவு, மரம் வளர்ப்பு முறைகள் மட்டுமின்றி நோய் தாக்குதல் இல்லாத சுகாதாரமான சூழலையும் உள்ளடக்கும்.

மாசில்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதுடன், நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகி வருகிறது. இதற்காக கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களில் மரக்கன்று வளர்ப்பை ஊக்குவித்து வருகிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பலன் தரும் மரக்கன்றுகளை வாங்கி அவற்றை நட்டு பராமரிப்பதற்கு ஆலோசனைகள் வழங்குகிறோம். மனிதனின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பில் உணவு முறைக்கு முக்கிய இடம் உண்டு. இதனை மாணவ சமுதாயம், மகளிர், முதியோர் ஆகியோரை இலக்காக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகளில், காய்கறி தோட்டங்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம். மருந்துகள் தெளிக்காத முறையில் சமையல் தோட்டங்கள் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. சித்தையன்கோட்டை, சேடப்பட்டி, ஆத்தூர், பஞ்சம்பட்டி குழந்தைகள் மையங்களில், இவற்றை ஏற்படுத்தி உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us