/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாத வளைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு
/
பாத வளைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு
பாத வளைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு
பாத வளைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு
ADDED : அக் 13, 2025 03:36 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குயின் சிட்டி ரோட்டரி கிளப், எஸ்.பி.சி. தனியார் பள்ளி, க்யூர் இன்டர்நேஷனல் இந்தியா டிரஸ்ட் ஆகியவை இணைந்து பாத வளைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கினர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எலும்பியல் துறைத்தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் வீரமணி, மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.பாத வளைவால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்புகள், பிரத்தியேக தோல் பை பரிசாக வழங்கப்பட்டது. இதில், டாக்டர்கள் சுரேஷ் பாபு, ஷர்மிளா ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ராஜாத்தி, மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.