UPDATED : ஆக 13, 2026 09:01 PM
ADDED : ஆக 13, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தேசியக்கொடிகள் ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
தலைமை தபால் நிலையத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், சந்திரசேகரன், ஆனந்தி, பொருளாளர் கருப்பசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் தனபால், மாவட்ட துணைத்தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
