/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய ஹேண்ட்பால் போட்டி தமிழக அணி வீரர்கள் தேர்வு
/
தேசிய ஹேண்ட்பால் போட்டி தமிழக அணி வீரர்கள் தேர்வு
ADDED : மார் 16, 2025 12:57 AM

சின்னாளபட்டி, ; தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடந்தது.
தேசிய அளவிலான 19 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான ஹேண்ட்பால் போட்டிகள் உ.பி., மாநிலம் லக்னோவில் மார்ச் 26-ல் துவங்கி மார்ச் 30 வரை நடக்க உள்ளது. அதே மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் மகளிருக்கான போட்டிகள் மார்ச் 31 முதல் ஏப். 5 வரை நடக்க உள்ளது. இப்போட்டிகளில் தமிழக அணிகள் பங்கேற்க உள்ளன. இவற்றுக்கான வீராங்கனைகள் தேர்வு, சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு ஹேண்ட்பால் கழக மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திலகம், மதுரை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் கண்ணன், சேலம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் விக்னேஷ் ,ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ராஜா, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஹேண்ட்பால் பயிற்சியாளர்கள் சர்மிளா, ஜோசப், குழந்தை பாக்கியம் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா வரவேற்றார்.
32 மாவட்டங்களை சேர்ந்த 120-க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். வீரர்களின் திறனுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.