/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்; தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜன 28, 2025 12:44 AM
திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் பிற மாவட்ட முதுகலை ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் செய்ய தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல்லில் அச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, தர்மபுரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 100 முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடுமையாக உழைத்து நல்ல தேர்ச்சி சதவீதமும் தருகின்றனர்.
இவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
மனமொத்த மாறுதலில் ஆசிரியர்கள் செல்லலாம் என்ற ஆணை இருந்தாலும் கூட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தான் இதுபோன்ற மாறுதல் கிடைக்கின்றன.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் இவர்கள் உடலாலும், மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நலனில் அக்கறை செலுத்தி சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் ஆணை வழங்குவதுடன், இதனால் ஏற்படும் ஆசிரியர் தேவையை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.