UPDATED : அக் 13, 2026 07:41 PM
ADDED : அக் 13, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி: பச்சைமலையான்கோட்டை அருகே காமுபிள்ளைசத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் விஜய் வரவேற்றார்.
மாணவர்களுக்கான தலைமைப் பண்பு, போதை விழிப்புணர்வு, சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், இலக்கியா, சோபனா, சரவணவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
