/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
/
என்.பி.ஆர்., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
என்.பி.ஆர்., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
என்.பி.ஆர்., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ADDED : டிச 27, 2025 06:24 AM

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். தமிழ் துறை உதவி பேராசிரியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கோயில், பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், போதை தடுப்பு, பாதுகாப்பான இணைய சேவை, வாக்காளர், பிளாஸ்டிக் ஒழிப்பு, ரத்ததான, உடல் ஆரோக்கிய, டிஜிட்டல் கல்வி அறிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
இந்த 7 நாள் சிறப்பு முகாமின் நிறைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.