/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்
/
நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்
ADDED : பிப் 18, 2025 05:27 AM
திண்டுக்கல்: ''நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா திட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக,'' கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இத்திட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் உருவாக்கப்படும். நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு நில அளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும்.
ஆட்சேபனைகள் இருப்பின் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும்.

