/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விதைப்பந்துகள் துாவிய என்.சி.சி., மாணவர்கள்
/
விதைப்பந்துகள் துாவிய என்.சி.சி., மாணவர்கள்
ADDED : அக் 30, 2025 04:23 AM
பழநி: பழநி முருகன் மனநல காப்பகத்தில் கோயில் நிர்வாகம், விழுதுகள் தன்னார்வ அமைப்பு இணைந்து அரசு, ஆலம், அத்திமர விதைகள் பதிக்கப்பட்ட விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன.
பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் 14வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., திண்டுக்கல் மாவட்டம் சார்பாக அக்.,22 முதல் அக்., 31 வரை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 கல்லுாரி, 20 பள்ளிகளில் இருந்து 500க்கு மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர்.
நேற்று முருகன் கோயில் வந்த என்.சி.சி., மாணவர்கள் கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பு தயாரித்த 2000 விதைப்பந்துகளை முருகன் மலை மீது துாவினர். திண்டுக்கல் பட்டாலியன் கமேண்டன்ட் லெப்டினன்ட் கர்ணல் ஜெகதீசன், துணை கமேண்டன்ட் லெப்டினன்ட் கர்ணல் நவ்நீத்கணேஷ், என்.சி.சி., அதிகாரி கேப்டன் பாக்கியராஜ் கலந்து கொண்டனர்.

