sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது  அவசியம்: வறண்ட நீர் ஆதாரங்களால் ஊருக்குள் வரும் சூழல்

/

வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது  அவசியம்: வறண்ட நீர் ஆதாரங்களால் ஊருக்குள் வரும் சூழல்

வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது  அவசியம்: வறண்ட நீர் ஆதாரங்களால் ஊருக்குள் வரும் சூழல்

வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது  அவசியம்: வறண்ட நீர் ஆதாரங்களால் ஊருக்குள் வரும் சூழல்


UPDATED : மார் 10, 2026 09:13 AM

ADDED : மார் 10, 2026 05:54 AM

Google News

UPDATED : மார் 10, 2026 09:13 AM ADDED : மார் 10, 2026 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதிகளில் நீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல், ஆடலூர், தாண்டிக்குடி, பன்றிமலை உள்பட வனம் சார்ந்த பகுதிகள் நிறைய உள்ளன. இவ்விடங்களில் மலை ஆடுகள், காட்டெருமை, கரடி, குரங்கு, புலி, யானை உள்ளிட்ட எண்ணற்ற விலங்குகள் வாழ்கின்றன.

கோடை காலங்களில் தண்ணீர் தேடி அலையும் விலங்குகள் இளைப்பாற வனத்துறை சார்பில் காட்டிற்குள் குறிப்பிட்ட தொலைவில் பள்ளங்கள் தோண்டி தண்ணீர் நிரப்பப்படுகிறது. இயற்கையான நீர்வழி ஓடைகள், ஆறு, குட்டைகள் பாதுகாக்கப்பட்டு சூழல் சமநிலை உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கோடை காலத்திற்கு முன்பாகவே மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளது. பருவ மழையும் சராசரியை விட குறைவாக பெய்திருப்பதால் குளம், குட்டை, கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. நகர், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணைக்கட்டுகளிலும் குறைந்த அளவை நீர்மட்டம் இருக்கிறது. இதனால் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் வனப்பகுதிகளில் நீர் வரத்து ஓடைகள், கால்வாய்கள், நீர் சேமிப்பு குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் கோடை காலத்திற்கு முன்பே வனவிலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நீர் தேவையை பூர்த்தி செய்ய வனவிலங்குகள் ஊருக்குள் வரும் நிலை உள்ளது. இதனால் விலங்கு, மனித மோதல் ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுக்க வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---






      Dinamalar
      Follow us