/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு
/
வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு
வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு
வனப்பகுதி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்! தாமத நடவடிக்கையால் அரிய மரங்கள் அழிவு
ADDED : மார் 19, 2024 05:58 AM

கன்னிவாடி : கோடைகாலத்தில் ஆண்டுதோறும் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல் இந்தாண்டும் வனத்துறை அலட்சியம் தொடர்கிறது. அரிய வன உயிரினங்கள், மரங்கள் அழியும் அவலம் குறைக்க ஏட்டளவு நடவடிக்கைகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள், வாழிடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொள்கின்றன. மலைப்பகுதி, அடிவார கிராமங்களில் பரவலாக தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது.
தனியார் பட்டா நிலங்கள் மட்டுமன்றி வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் பராமரிப்பில் உள்ளன. ஆண்டுதோறும் கோடை கால துவக்கம் முதலே வன வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவதுடன் வன உயிரினங்கள், தாவரங்களை அழிக்கும் காட்டுத்தீ பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதில் மனித செயல்பாடுகளின் அலட்சியம், ஆக்கிரமிப்பு, முறைகேடான செயல்கள் போன்றவற்றுகாக காட்டுத் தீ பெயரில் செயற்கையான முறையில் இது போன்ற வளங்கள் அழிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
வெப்பநிலை, காற்றின் வேகம், மண் , காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு, வறட்சி, வெப்ப சூழலில் மரங்கள் உராய்வு போன்ற காரணங்களால் இயற்கையான தீ ஏற்படுகிறது. இதனால் மழைப்பொழிவு பாதிப்பு, அதிக வெப்பநிலை, வறண்ட சூழ்நிலை போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
வழித்தடம், வனவிலங்கு ஊருக்குள் நுழைவதை தடுத்தல், சுற்றுலாப் பயணிகளால் அலட்சியமாக எறியப்படும் தீ பற்றக் கூடிய பொருட்கள் போன்ற மனித நடவடிக்கைகளால், காட்டுப் பொருட்கள், மரங்களில் தீ வைக்கப்படுவது பரவலாக அதிகரித்துள்ளது. மேற்பரப்பில் உள்ள காய்ந்த குப்பை மட்டுமின்றி மரங்கள், அரிய மூலிகை தாவரங்கள் அழிந்து அடர் புகையை உருவாக்குகிறது. வன உயிரினங்கள் வாழ்விடத்தை இழந்து அழிவதுடன் அடிவார கிராமங்களை நோக்கி படையெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன.
மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கிய நிலையில், இனிமேலும் தாமதத்தை வனத்துறை தவிர்க்க முன்வர வேண்டும். இப்பிரச்னையை கட்டுப்படுத்தும் வகையிலான வனத்துறையின் தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.

