/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்
/
பழநி முருகன் கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்
ADDED : ஏப் 05, 2025 03:00 AM

பழநி,:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக டி.வி.எஸ்., நிறுவனத்தின் சி.இ.ஓ., ராதாகிருஷ்ணன் பேட்டரி பஸ் வழங்கினார்.
பழநி கிரிவீதியில் நீதிமன்றம் உத்தரப்பின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக பேட்டரி கார், பஸ்களை இயக்கி வருகிறது. டி.வி.எஸ்., குழுமத்தின் சார்பில் சி.இ.ஓ., ராதாகிருஷ்ணன் 22 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்சை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 28 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

