/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம்
/
வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம்
ADDED : டிச 23, 2024 05:27 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு நடக்கோட்டையில் வைகாற்றின் குறுக்கே ரூ. 12 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமை வகித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் கனிக்குமார் பேசியதாவது: தெப்பத்துப்பட்டி,ரெங்கப்பநாயக்கன்பட்டி, சந்தையூர், விருவீடு, நடகோட்டை உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட ஊராட்சி பொதுமக்கள் நிலக்கோட்டை செல்வதற்கு வத்தலக்குண்டு வழியாக 15 முதல் 20 கி.மீ., வரை சுற்றி செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
தற்போது பாலம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் நிலக்கோட்டைக்கு விரைவில் செல்ல முடியும் என்றார்.