/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓரிரு மாதங்களில் திண்டுக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் அமைச்சர் பெரியசாமி பேச்சு
/
ஓரிரு மாதங்களில் திண்டுக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் அமைச்சர் பெரியசாமி பேச்சு
ஓரிரு மாதங்களில் திண்டுக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் அமைச்சர் பெரியசாமி பேச்சு
ஓரிரு மாதங்களில் திண்டுக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் அமைச்சர் பெரியசாமி பேச்சு
ADDED : மார் 04, 2024 07:27 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல் புறவழி பஸ்ஸ்டாண்ட் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும்,'' என அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்டம், மாநகர தி.மு.க., சார்பில் நடந்த முதல்வர் ஸ்டாலின் 71வது பிறந்ததினம், மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனை நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்ததோடு நின்றுவிட்டது.
அதை முழுமையாக நிறைவு செய்வதில் தி.மு.க., ஆட்சியே முன்னிலை வகிக்கும். திண்டுக்கல் புறவழி பஸ்ஸ்டாண்ட் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும். அதேபோல் மாநகர மக்களுக்கு 2வது காவிரி கூட்டு நீர் திட்டம் வெகு விரைவில் அரங்கேறும். தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றபட்டு விட்டது என்றார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: இந்த மேடையில் தாய்மார்களுக்கு சேர் போடப்பட்டு சரிநிகர் உரிமையை தந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஆதாரமாகும்.சமூகநீதி சமத்துவத்தை காக்க வேண்டிய வரலாற்றை சொல்வதுதான் இந்த விழாவாகும்.
திருக்குவளையில் இருந்து திருவாரூர் ஹைஸ் ஸ்கூலுக்கு ஆறாம் வகுப்பில் சேர நுழைவு தேர்வில் கருணாநிதி தேர்ச்சி அடையாததால் தற்கொலை மிரட்டல் விடுத்து கல்வி வாய்ப்பை பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் கொள்கைக்காக எதையும் தியாகம் செய்வார்.
திண்டுக்கல்லில் ஐ.பி., என்று சொன்னால் எனக்கு தெரியாது. ஆனால் இன்டெலிஜென்ட் பெர்சன்' அதாவது ஐ.பி., என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகத்தான் பெரியசாமியை எனக்கு தெரியும். அந்த அளவிற்கு அவர் திண்டுக்கல்லில் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார்.
வேலுச்சாமி எம்.பி., துணை மேயர் ராஜப்பா ,வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஒன்றிய குழுதலைவர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர். மேயர் இளமதி நன்றி கூறினார்.

