/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்
/
பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED : ஜன 28, 2025 12:48 AM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூசத்தையொட்டி புதிய தேர் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
இத்தேர் பிரதிஷ்டை செய்ய நேற்று முன்தினம் (ஜன.,26) முதற்கால வேள்வி துவங்கப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி துவங்க திருகுட ஞான உலா நடந்தது. பிறகு காலை 9:45 மணிக்கு கோயில் யானை கஸ்துாரி பின்னே வர ரத வீதிகளில் புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. காலை 11:20 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, எம்.பி., சச்சிதானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், கூடுதல் கமிஷனர் சுகுமாரன், இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.