/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் வருகை
/
பழநி கோயில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் வருகை
ADDED : ஜன 23, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயில் ரோப் காருக்கு ரூ. 26.50 லட்சத்தில் புதிய பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
பழநி முருகன் கோயிலுக்கு செல்ல ரோப் கார், வின்ச், படிப்பாதை பயன்படுகிறது. ரோப் காரில் மூன்று நிமிடத்தில் சென்று வர முடியும். தற்போது ரோப் காரில் 10 பெட்டிகள் உள்ளன. அவை சேதமாகி உள்ளதால் இவற்றை மாற்ற புதியதாக 10 பெட்டிகள் கோல்கட்டாவிலிருந்து ரூ.26.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி 290 கிலோ எடை உடையது.
முதலில் 5 பெட்டிகள் வந்த நிலையில் மீதமுள்ள 5 பெட்டிகள் வந்ததும் ரோப் காரில் பொருத்தப்பட்டு சோதனைக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.