ADDED : ஜூன் 28, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி  அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி அமர்ந்த கோலத்திலும் சூரிய பகவான் சந்தன காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். 18 சித்தர்கள், பாலம்பிகை ஆயூர்தேவி ரேணுகாம்பாள் முதலிய தெய்வங்களுக்கு அபிஷேகம்,   தீபாராதனை செய்ய  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சவுராஷ்ட்ரா சபை தலைவர் அருள்ஜோதி, செயலாளர் சாந்தியால், மேனேஜிங் டிரஸ்டி கண்ணன், சிவ பாலாஜி ஸ்டில்ஸ் உரிமையாளர்கள் சுப்பிரமணியன், சிவா, பாலவிக்னா வீவிங் மில்ஸ் இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர்
திண்டுக்கல் கேட்டரிங் அசோசியேசன் சங்கம்  தலைவர் கணேசன், செயலாளர் பிரகாஷ் தலைமையில் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

