ADDED : அக் 30, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி கரந்த மலை அடிவாரத்தில் உள்ள மாமரத்துப்பட்டி, வலசு, அகி கிராமங்களில் 1000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் ரேஷன் பொருள்கள் வாங்க 4 கிலோ மீட்டர் நடத்து வல்லம்பட்டி சென்று வந்தனர். தங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடையாவது திறக்க மக்கள் கோரினர். இதையடுத்து மாமரத்துப்பட்டியில் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் பகுதி நேரரேஷன் கடையை திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜன். , சாணார்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் வீராச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள் கலந்து கொண்டனர்.

