sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் வழி மயிலாடுதுறை பாலக்காடுக்கு புதிய ரயில்

/

திண்டுக்கல் வழி மயிலாடுதுறை பாலக்காடுக்கு புதிய ரயில்

திண்டுக்கல் வழி மயிலாடுதுறை பாலக்காடுக்கு புதிய ரயில்

திண்டுக்கல் வழி மயிலாடுதுறை பாலக்காடுக்கு புதிய ரயில்


ADDED : செப் 27, 2024 02:33 AM

Google News

ADDED : செப் 27, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:மயிலாடுதுறையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில், காலை 8:50 மணிக்கு தஞ்சாவூருடன் நிறுத்தப்படுகிறது. இதே போல, பாலக்காடு ரயில், மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

இவ்விரு ரயில்களையும் ஒருங்கிணைத்து தஞ்சாவூரில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியே பாலக்காடுக்கு மதியம் 2:40 மணிக்கு சென்றடையும் வகையில் புதிய ரயில் இயக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, ஈரோட்டில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 11:35 மணிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி,தஞ்சாவூர் வழியே மயிலாடுதுறைக்கு இரவு 8:30 மணிக்கு சென்றடையும்.

இரு பக்கமும் இன்ஜின் தொகுப்பு பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுவதால், திண்டுக்கல்லில் இன்ஜின் திசை மாற்றுவதற்கான தாமதம் ஏற்படாது.

இதேபோல கேரள மாநிலம் புனலுாரில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர் வழியே மதுரைக்கு அதிகாலை 3:00 மணிக்கு வருகிறது.

இந்த ரயிலை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம் வழியே விழுப்புரத்திற்கு காலை 8:00 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us