/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில்.. தி.மு.க., முகவர்கள் கூட்டம்
/
செய்தி சில வரிகளில்.. தி.மு.க., முகவர்கள் கூட்டம்
ADDED : டிச 05, 2024 06:16 AM
வடமதுரை :வடமதுரை நகர தி.மு.க., சார்பில் தேர்தல் பூத் நிலை முகவர்கள், குழு உறுப்பினர்கள் கூட்டம் செயலாளர் கணேசன் தலைமையில் நடந்தது. மாணவர் அணி மாநில துணை செயலாளர் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் வீரமணி, தேன்மொழி, அழகுமலை, பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர்.
மீன் சுழற்சி பணிமனை
திண்டுக்கல் : நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் மீன் சுழற்சி பணிமனை நடந்தது. பயன்படாத குப்பைகளிலிருந்து சுழற்சி செய்து உபயோகமான பொருட்களாக மாற்றும் பயிற்சி மாணவர்களுக்கு தரப்பட்டது. காலை ஆசிரியை சண்முகமலர் பயிற்சி கொடுத்தார். ஆசிரியர்கள் கார்த்தி, அருள்ஜெயந்து, நர்மதா, ஜெயந்தி கலந்து கொண்டனர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். அந்தோணி சுரேஷ்தாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் மகேஸ்வரன் செய்திருந்தார்.
..............
எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., ஆய்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி.,பிரேம் ஆனந்த்சின்ஹா ந ஆய்வு செய்தார். வருடாந்திர ஆய்வுக்காக வந்த அவருக்கு எஸ்.பி.,அலுவலகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். 2024ல் மாவட்டத்தில் நடந்த குற்றங்கள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதன் விவரம், திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களின் பட்டியலையும் ஆய்வு செய்யப்பட்டது. எஸ்.பி.,பிரதீப் உடனிருந்தனர்.