sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சில வரிகளில்... உலக கேரட் தினவிழா

/

செய்தி சில வரிகளில்... உலக கேரட் தினவிழா

செய்தி சில வரிகளில்... உலக கேரட் தினவிழா

செய்தி சில வரிகளில்... உலக கேரட் தினவிழா


ADDED : ஏப் 06, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக கேரட் தினவிழா

சித்தையன்கோட்டை :சித்தையன்கோட்டை 6ம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக கேரட் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலாவதி தலைமை வகித்தார். புரவலர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ராஜேஸ்வரி, அமைப்பாளர் பிரேமா முன்னிலை வகித்தனர். அச்சாணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமு பேசினார்.ஏற்பாடுகளை ஆசிரியை பர்வதராஜகுமாரி தலைமையிலான குழுவினர் செய்தனர். தன்னார்வலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

ஊராளிபட்டியில் மண்டல பூஜை

நத்தம் : ஊராளிபட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 16-ல் நடந்தது . தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது.நேற்று 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.

தி.மு.க., முகவர்கள் கூட்டம்

நத்தம்: - கோவில்பட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ஓட்டுசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,நகர செயலாளர் ராஜ்மோகன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி,நகர அவைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். நத்தம் தொகுதி பொறுப்பாளர் ரஞ்சன்துரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை பூத்வாரியாக செய்திடவும், தொடர்ந்து அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆண்டு விழா

வேடசந்துார் --:கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் வீரலட்சுமி, சுதா, கலையரசி, ஹெலன் மேரி, சகுந்தலா, மணிமொழி, ராஜம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

பிறந்தநாள் விழா

திண்டுக்கல் :திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்கம் சார்பில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் எம்.பி., மூக்கையா தேவர் 103 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் அறிவு வரவேற்றார். கவுரவத் தலைவர் ராமுத்தேவர் கலந்து கொண்டார்.

நகராட்சி கூட்டம்

பழநி : பழநி நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கமிஷனர் சத்தியநாதன், பொறியாளர் ராஜவேலு, எம்.எச்.ஓ., மனோஜ் குமார் முன்னிலை வகித்தனர் பழநிக்கு பாதாள சாக்கடை திட்டம் வழங்கியதற்கும், சிறப்பு நிலை நகராட்சியாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us