sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சிலவரிகளில்... திண்டுக்கல்

/

செய்தி சிலவரிகளில்... திண்டுக்கல்

செய்தி சிலவரிகளில்... திண்டுக்கல்

செய்தி சிலவரிகளில்... திண்டுக்கல்


ADDED : ஏப் 23, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் :மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு டி.என்.டி., சான்றிதழ் வழங்கவும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி ,திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விடுதலைக்களம் கட்சி நிறுவனர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழறிஞர் சங்க கூட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு தமிழ்மொழி வளர்ச்சித் தமிழறிஞர் சங்கக் கூட்டம் தலைவர் சவுந்தரராஜ் தலைமையில் நடந்தது. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 7500 உயர்த்தி வழங்கிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், பெரியசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சங்க செயலாளர் ரெங்கையா, பொருளாளர் ராமராஜ், துணைத் தலைவர் துரைச்சாமி, உறுப்பினர்கள் மாரிமுத்து, கந்தசாமி, கோபிச்செல்வி பங்கேற்றனர்.

தி.மு.க.,மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

நத்தம் : சமுத்திராபட்டியில் தி.மு.க., தெற்கு ஒன்றிய மாணவரணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன்,தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் தேனம்மாள் தேன்சேகர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி இணை செயலாளர் வீரமணி உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய படிவங்களை வழங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ்,துணை அமைப்பாளர் சிவா கலந்து கொண்டனர்.

ஆட்டோ மோதி மாணவர் பலி

வேடசந்துார் :மல்வார்பட்டி ஒத்தையூரை சேர்ந்தவர் சுகுமார் 18. பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். ஏப். 5ல் தட்டாரப்பட்டி பிரிவு அருகே டூ வீலரை ஓட்டி சென்றார். ஆத்துமேடு ராஜகோபாலபுரம் சுந்தரம் 45,ஓட்டி வந்த ஆட்டோ மோதியதில் சுகுமார் காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us