ADDED : அக் 31, 2025 02:01 AM
அங்கன்வாடி மையம் திறப்பு
சாணார்பட்டி : மருநூத்தில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், சேக் சிக்கந்தர் பாட்சா, ஜான் பீட்டர், மோகன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாம்
நத்தம் : அரசு மண்டபத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜகுரு தலைமை வகித்தார். தாசில்தார்கள் ஆறுமுகம், பாண்டியராஜன், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தனர். நத்தம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
-நத்தம் : குட்டுப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், யூனியன் ஆணையாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மகளிர் உரிமை தொகை, சமூகநலத்துறை, வீட்டுவசதி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப் பட்டது.

